செவ்வாய், 22 ஜனவரி, 2013

நீங்களும் ஹீரோதான்




நான் நேற்று கண்ணா லட்டு திங்க ஆசையா படம் பார்த்தேன்.அதில் படத்தின் முடிவில்  சிம்பு கூறும் வசனம் நிதர்சனமான உண்மை. அது ''பிரச்சனைன்னு ஒன்று வருவதே நம்ம திறமையை நாம வெளிக்கொண்டு வருவதற்கு கடவுள் கொடுத்த கிஃப்ட். உன் பிரச்சனையை நீயே தீர்த்துக்கொண்டால் நீயும் ஹீரோதான்.''
           பல சமயங்களில் நமக்கு பிரச்சனை வரும் போது நம்முடைய அறிவு வேலை செய்வது இல்லை.எனவே நாம் பிறர் உதவியை நாடுகின்றோம்.அதுவும் இப்பொழுது உள்ள காலகட்டத்தில் பெரும்பாலோனோர் தண்ணியடித்துக்கொண்டேதான் பேசுகின்றோம் . அப்பொழுது நம் பிரச்சனையை கேட்பவரும் தண்ணியடித்திருப்பதால் அவருடைய அறிவும் வேலை செய்வதில்லை. எனவே பெரும்பாலான சமயங்களில் தவறான முடிவுகளையே எடுக்கிறோம். எனவேதான் பல குற்றச்செயல்கள் நடக்கின்றது.மேலும் குடியினால் நாம் நெகடிவான முடிவுகளையே எடுப்போம்.
     
            எனவே முடிந்தவரை பிரச்சனையின் போது குடித்துவிட்டு முடிவெடுப்பதை தவிர்ப்போம்.நல்ல முறையில் சிந்தித்து நம் பிரச்சனைகளுக்கு நாமே தீர்வு கண்டால் நாமும் ஹீரோதான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக