ஞாயிறு, 20 ஜனவரி, 2013

பயம் எனும் பேய்



ஒரு ஊரில் மாணிக்கம் என்ற ஒரு ஆடு வளர்ப்பவர் இருந்தார். அவருக்கு பாபு,கோபு என்ற இரு மகன்கள் இருந்தனர்.மாணிக்கத்திற்கு வயசாகி விட்டதால் அவர் தன்னிடமிருந்த ஆடுகள் அனைத்தையும் தனது மகன்கள் இருவருக்கும் பிரித்துக்கொடுக்க முடிவு செய்து ஆடுகளை சரி பாதியாக பிரித்துக்கொடுத்தார். பாபு கோபு இருவரும் வெவ்வேறு இடங்களில் தங்களுடைய ஆடுகளை வளர்த்தனர். அந்த ஆடுகள் அனைத்திற்க்கும் தீவனம் போடும் பொறுப்பு அவர்களின் தந்தைக்கு கொடுக்கப்பட்டது. ஒரு வாரம் கழித்து பார்த்த போது பாபுவின் ஆடுகள் அனைத்தும் நன்றாக குண்டாக இருந்தன. எனவே கோபுவிற்கு தன் தந்தை தன் ஆடுகளிற்கு சரியாக தீவனம் கொடுப்பதில்லை என சந்தேகம் வந்தது. எனவே இதைப்  பற்றி ஊர் தலைவரிடம் முறையிட்டான்.ஊர் தலைவர் நாம் இருவரும் உன் தந்தையின் நடவடிக்கைகளை ஒரு வாரம் கவனிப்போம் என்று கூறினார். கோபுவும் அதற்கு ஒத்துக்கொண்டான்.அதன்படி இருவரும் ஒரு வாரம் கவனித்தனர்.கோபுவின் தந்தை இருவரின் ஆடுகளுக்கும் சமமாகவே தீவனம் கொடுத்தார்.இருவரின் ஆடுகளும் நன்றாகவே சாப்பிட்டன. கோபுவிற்கும் ஊர் தலைவருக்கும் பின் எவ்வாறு  கோபுவின் ஆடுகள் மட்டும் இளைத்துப்போய் உள்ளன என்று ஒன்றும் புரியவில்லை. எனவே இதைப் பற்றி கோபுவின் தந்தையிடமே கேட்டனர்.ஆடுகள் வளர்ப்பதில் முதிர்ந்த அனுபவம் கொண்ட அவர் தன் மகனிடம் உன் ஆட்டுப்பட்டிக்கு எதிரே கவனி என்றார்.எதிரே ஒரு கறி கடை இருந்தது.உன் ஆடுகள் என்னதான் சாப்பிட்டாலும் எதிரே உள்ள கடையில் ஆடுகள் வெட்டும்போது அவற்றின் மனதில் பயம் வந்து விடும். எனவே அந்த பயம் எனும் பேய் அவை சாப்பிடுவதை அவற்றின் உடம்பில் ஒட்டாமல் செய்து விடுகின்றது. எனவேதான் உன் ஆடுகள் அனைத்தும் ஒல்லியாக உள்ளன என்று கூறினார்.இதை கேட்ட கோபு தன் ஆடுகளை வேறு இடத்தில் நன்றாக வளர்த்தான்.


சொல்ல வந்த தகவல்:

     இந்த கதை ஆடுகளுக்கு மட்டும் அல்ல நமக்கும்தான். நம்மிடம் பயம் வந்துவிட்டால் உடல் நலமும்,மன நலமும் கெட்டுவிடும்.எனவே பயம் எனும் பேயை நம் மனதிலிருந்து விரட்டுவோம்.


பின் குறிப்பு: 
 
          இது என்னுடைய முதல் பதிவு தவறு ஏதேனும் இருந்தால் தயவு செய்து சுட்டிக்காட்டவும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக