நிப்ட் ( NIFT ) விண்ணப்பிக்கும் நேரம் இது.
1986ம் ஆண்டு, நிப்ட் மையம் டெல்லியில் மட்டுமே இருந்தது. ஆனால், இன்று அந்த எண்ணிக்கை 15ஆக உயர்ந்துள்ளது.
வடிவமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை ஆகிய துறைகளில், இளநிலை, முதுநிலை மற்றும் டாக்டோரல் படிப்புகள் வரை இவர்கள் வழங்குகிறார்கள்.
நிப்ட் மையங்கள் பேஷன் மற்றும் டெக்ஸ்டைல் டிசைன் ஆகிய படிப்புகளைத் தாண்டி, தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை சார்ந்த படிப்புகளும் வழங்கப்படுகின்றன. இவை பேஷன் படிப்புடன், துணைப் பாடங்களாக வழங்கப்படுகின்றன.
மேலும் அவை கீழ்காணும் பட்டங்களை வழங்குகின்றன.
பேச்சுலர் ஆப் டிசைன்(B Des.)
இது 4 வருட படிப்பாகும். இதில், பேஷன் டிசைன், லெதர் டிசைன், அக்சசரி டிசைன், டெக்ஸ்டைல் டிசைன், நிட்வேர் டிசைன் மற்றும் பேஷன் கம்யூனிகேஷன் போன்ற அம்சங்கள் அடங்கும்.
பேச்சுலர் இன் பேஷன் டெக்னாலஜி(B.F.Tech)
அப்பாரல் ப்ரொடக்ஷன். இது 4 வருட படிப்பாகும்.
மாஸ்டர் ஆப் டிசைன்(M.Des) - டிசைன் ஸ்பேஸ்
எம்.எப்.,டெக் - மாஸ்டர்ஸ் இன் பேஷன் டெக்னாலஜி
எம்.எப்.எம் - மாஸ்டர்ஸ் இன் பேஷன் மேனேஜ்மென்ட்.
எப்போது? எவ்வாறு விண்ணப்பிக்கலாம்?
இந்த 2013ம் ஆண்டில் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இப்போது பொதுப் பிரிவுக்கு ரூ.1,100ம், SC/ST/PHP பிரிவுக்கு ரூ.550ம் விண்ணப்பக் கட்டணமாக வசூலிக்கப்படுகின்றன.
படிப்பு பற்றிய அனைத்து விபரங்களையும் கொண்ட Prospectus -ஐ, டவுன்லோடு செய்யwww.applyadmission.net/nift2013/Prospectus2013.pdf. இங்கு கிளிக்கவும்.
நுழைவுத்தேர்வு எப்படி இருக்கும் ?
இளநிலை மற்றும் முதுநிலைப் படிப்புகளில் சேரக்கூடிய மாணவர்கள், ரெண்டு பிரிவுகளில், பேப்பர் வழியிலான தேர்வுகளை எழுத வேண்டும். General Ability தேர்வானது(GAT), Quantitative ability, Communication ability, English comprehension, Analytical ability, General knowledge and Current affairs போன்ற அம்சங்களைக் கொண்டிருக்கும்.
Creative Ability தேர்வானது(CAT), உங்களின் படைப்பாக்க மற்றும் புத்தாக்க திறன்களை சோதிக்கிறது.
மேற்கூறிய 2 தேர்வுகளில், செயல்பாடு கணக்கிடப்பட்டு, 6,000 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இவர்கள், Material handling test என்ற ஒரு தேர்வில் பங்குகொள்ள வேண்டும். இந்த தேர்வில், மாணவர்களுக்கு மெட்டீரியல்கள் வழங்கப்படும். அதை வைத்து, கொடுக்கப்பட்ட விளக்கத்திற்கேற்ற மாடலை அவர்கள் உருவாக்க வேண்டும்.
இளநிலை மற்றும் முதுநிலைகளில், தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை படிப்புகளுக்கு நடத்தப்படும் GAT தேர்வானது, கூடுதல் அம்சங்களைக் கொண்டுள்ளது. இது கேஸ் ஸடடி ஆகும் ஆனால் கிரியேடிவ் டெஸ்ட் அல்ல. அனைத்து முதுநிலைப் படிப்புகளிலும் சேர, குழு கலந்தாய்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றை கடக்க வேண்டும். இவற்றுக்கு 30% வெயிட்டேஜ் மதிப்பெண்கள் உண்டு.
மேலும் விரிவான விவரங்களுக்கு கீழ்காணும் வலைமுகவறியைப் பார்க்கவும்.
(http://www.nift.ac.in), தமிழில் .






![மெகா சீரியல்கள்
--------------------------
S.Ve.சேகர், B.R.சோப்ரா, Y.G.மகேந்திரன், நாகா போன்றோரை எண்ணி ஏங்க வைத்துவிட்டார்கள் இன்றைய சின்னத்திரை நாடக இயக்குனர்கள்.
தற்காலங்களில் வரும் நாடகங்களில் சினிமா இறுதி கட்ட காட்சி பார்ப்பது போல இரைச்சல் பின்னிசை, பளீர் பளீர் என்று ஒளி வீச்சு, அதிர்வு நிலையில் டி.வி. யை வைத்தது போல கிடி கிடு என நடுக்கம். அதாவது, நிலைமையின் தீவிரத்தை காட்டுகிறார்களாம். படபடப்பு, ஆக்ரோஷம், கடுமையான சொல்லாடல் போன்றவை தான் இன்றைய நாடகங்கள் கற்று கொடுக்கின்றன. மலேசியா உட்பட பல்வேறு இடங்களில் தமிழ் மக்களே இது போன்ற நாடகங்களுக்கு தடை கோரி போராடியுள்ளது வெளியே தெரியாத ஒன்று. எப்போது நாடகத்தை பார்த்தாலும் ஒன்று மிக பெரிய இழப்பை சந்தித்தது போன்ற சோக இசை இல்லை, மிக கொடூரமான இறுதிகட்ட காட்சி போன்ற இசை. இப்படி தினம் தினம் பெண்கள் மத்தியில் இதுபோன்ற நாடகங்களை போடுவதால் அவர்களை உணர்ச்சி பிழம்பாக மாற்றி வைத்துள்ளனர். சிறு விசயங்களுக்கு கூட அதீத உணர்ச்சிபூர்வமான ரியாக்சன் வருகிறது.
இதுவே 90 களில் வந்த நாடங்களில் ஒரு சலனமற்ற, நிதானமான, அதேசமயம் விறுவிறுப்பு, நகைச்சுவை கொண்ட கதைகளத்தோடு நாடகத்தை நகர்த்துவார்கள். பார்ப்பவர்களுக்கு ஒரு தேர்ந்த எழுத்தாளரின் நாவல் படிப்பது போல இருக்கும். S.Ve.சேகர், கிரேசி மோகன், Y.G.மகேந்திரன் போன்றோரின் நகைச்சுவை, குடும்ப நாடகங்கள் பார்க்கும் போது வீட்டில் வசந்தம் வீசும். நாகா இயக்கிய மர்ம தொடரில் கூட விறுவிறுப்பும், நிதானமான பொழுதுபோக்கும் இருக்கும். B.R.சோப்ரா போன்றோரின் ராமாயணம், மகாபாரதம் போன்ற பக்தி-இதிகாச நாடகங்கள் இன்றும் மறக்க இயலாது. திகில் நாடகமான நிஷா காந்தி கூட இதே வகைதான்.
சுருக்கமாக அன்றைய நாடகங்கள் பார்க்கும்போது தியானம் செய்தது போன்ற திருப்தியும் நிறைவும் கிடைத்தது. இன்றைய நாடகங்களில் இருந்து வீட்டு பெண்களையும் குழந்தைகளையும் எப்படி காத்து மீட்பது என்று தெரியவில்லை..
» ѕυвѕ¢яιвє & נσιη ωιтн υs @ @[261623157206710:274:டீ கடை பெஞ்சு]
-](https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-ash4/s480x480/603081_472519059450451_415103728_n.png)



