திங்கள், 21 ஜனவரி, 2013

கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்

ஒரு ஊரில் ஒரு பண்ணையார் பத்து கோழிகளும் பத்து ஆடுகளும் வளர்த்து வந்தார்.அவரது வீட்டில் எலி ஒன்றும் வசித்து வந்தது.அது அங்கிருந்த அரிசி மூட்டைகளை கடித்து அரிசியை சாப்பிட்டு வந்தது.இதனால் கோபமடைந்த பண்ணையார் ஒரு எலிப்பொறி வாங்கி வைத்தார்.இதனை பார்த்து விட்ட எலி நேராக கோழிகளிடம் சென்று தன்னை காப்பாற்றும்படி கேட்டது.ஆனால் கோழிகள் எலிப்பொறியால் தங்களுக்கு எதுவும் ஆபத்தில்லை என்றும் அதனால் அதைப்பற்றி தங்களுக்கு கவலையில்லை என்றும் கூறின. இதனை கேட்ட எலி நேராக ஆடுகளிடம் சென்று கூறியது.ஆடுகளும் அதையே கூறின.இதை கேட்ட எலி அழுது கொண்டே சென்று விட்டது.மேலும் அது பொறியில் மாட்டாமல் சுற்றி வந்தது.ஒரு நாள் இரவு ஒரு பாம்பு வந்தது.அதன்  வால் பொறியில் மாட்டி விட்டது.பாம்பு தப்பிக்க முயற்சி செய்த  போது சத்தம் வந்ததை கேட்ட பண்ணையாரின் மனைவி எலிதான் மாட்டிவிட்டது என நினைத்து பொறியின் அருகே சென்ற போது பாம்பு அவளை கடித்து விட்டது.விஷம் ஏறி உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்த அவரை பார்க்க உறவினர்கள் வந்து பத்து நாட்களுக்கு தினமும் ஒரு கோழியின் ஈரல் கொடுக்கும்படி கூறினர்.பண்ணையாரும் அதன்படி செய்தார்.இப்பொழுது கோழிகள் எலியிடம் நீ கூறிய அன்றே பொறியை எடுத்திருந்தால் இப்பொழுது சாக வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது என்று கூறி அழுதன.பத்து நாட்களுக்கு  பிறகு பண்ணையாரின் மனைவி இறந்து விட்டார்.அதன் பிறகு தன்னால் ஆடுகளை வளர்க்க முடியாது என்று கசாப்பு கடையில் விற்று விட்டார்.ஆடுகளும் எலியிடம் அழுதன.அதற்கு எலி நான் சொல்லியபோதே அந்த பொறியை எடுத்திருந்தால் உங்கள் யாருக்கும் இந்நிலை வந்திருக்காது கண் கெட்ட பிறகு சூர்யநமஸ்காரம் பார்க்க முடியாது என்று கூறி சென்றது.




சொல்ல வந்த தகவல்:  இன்று ஒரு பதிவில் விவசாயிகளின் தற்கொலை பற்றி படித்தேன்.யாரோ எங்கோ உள்ள ஒரு விவசாயிக்கு என்ன நேர்ந்தால் நமக்கென்ன என்று நாம் இருந்தால் விவசாய நிலங்கள் அனைத்தும் அப்பார்ட்மென்ட்களாக மாறும்.ஆனால் அரிசிக்கு வழியில்லாமல் அல்லலுறுவோம்.எனவே யோசிப்போம் நண்பர்களே இப்பொழுது நாம் விவசாயிகளுக்கு ஆதரவாக இல்லாவிட்டால்  நம் பேரப்பிள்ளைகளுக்கு உணவிட முடியாத சூழல் வரும்.எனவே கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வதை தவிர்ப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக