மகரந்தப்பூக்கள் என்ற இந்த புத்தகம் என்னுடைய நண்பர் திரு கதிர்வேல் எழுதிய தேனினும் சுவை மிக்க ஒரு புத்தகம்.இந்த மகரந்தப் பூக்கள் மணம் பரப்ப வாழ்த்துரை வழங்கி வெளியிட்டவர் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள்.நாமும் படித்து வாழ்த்துவோம் நண்பர்களே.
மாற்றம் மட்டுமே மாறாதது .தனி நபர் மாற்றம் உலகையே மாற்றும் என்ற கொள்கை உடையவன்.
சனி, 2 பிப்ரவரி, 2013
வெள்ளி, 1 பிப்ரவரி, 2013
ஐ.நா.வில் ஒலிக்கும் ஸ்வர்ணக் குரல்!
|
சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் இன்சுலின் செடி

இன்சுலின் செடி.
1) மூலிகையின் பெயர் -: இன்சுலின் செடி.
2) தாவரப்பெயர் -: காஸ்டஸ் பிக்டஸ்
1) மூலிகையின் பெயர் -: இன்சுலின் செடி.
2) தாவரப்பெயர் -: காஸ்டஸ் பிக்டஸ்
3)
PLANT FAMILY: Costaceae
4)
BOTANICAL NAME: Costus இக்நேஉஸ்
5) பயன் தரும் பாகம் -: இலை.
5) பயன் தரும் பாகம் -: இலை.
6)
வளரியல்பு -: இந்தச் செடி வளமான ஈரப் பதம் உள்ள இடங்களில்
நன்கு வளரக் கூடியது. இந்தத் தாவரம் ஈஞ்சி குடும்பத்தைச் சேர்ந்த தாவரம். மெக்சிகோ
மற்றும் கோஸ்டாரிகா நாடுகளில் முக்கியத்துவம் வாய்ந்தது. இதன் தாயகம் அமரிக்காவின்
புளோரிடா மாகாணம். இது பற்றி அறிந்த ஐரோப்பியர்கள் தற்போது இதன் பயனை முழுமையாக
அனுபவித்து வருகின்றனர். கொச்சியிலும் தமிழகத்திலும் கன்னியாகுமரி யிலும் இந்த
தாவரத்துக்கான நர்சரிகள் உள்ளன. நாம் இதை வீட்டுத் தோட்டங்களிலும் தொட்டிகளிலும்
கூட வளர்க்கலாம். இது மலைக் காடுகளிலும் நீர் நிலைப் பகுதிகளிலும் 10 அடி உயரத்திற்கு மேல் வளரக்கூடியது. இதை இனப்
பெருக்கம் செய்ய 3
கணுவுகளை உடைய
முதிர்ந்த குச்சிகளை கரும்பு நடுவது போல் நட்டால் வளர்ந்து விடும். ஆரம்பத்தில்
அடிக்கடி தண்ணீர் விட வேண்டும். இதன் இலைகள் மா இலை போன்று இருக்கும். ஆனால்
இலைகள் அடுக்காக விசிறி போல் சுற்றிக் கொண்டு மேல் நோக்கி வளரும். சுவை சிறிது
புளிப்பு கலந்திருக்கும்.
மருத்துவப் பயன்கள் -: சர்க்கரை நோயாளிகளுக்கு காஸ்டஸ் பிக்டஸ் என்ற தாவர இலை அதிக பயன்களைத் தருகிறது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் இன்சுலின் மருந்து பயன் படுத்த வேண்டும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. முதல் நிலை சர்க்கரை நோயாளிகளை தவிர்த்து 2 ம் நிலை சர்க்கரை நோயாளிகள் இன்சுலின் ஊசி போட்டுக் கொள்வதைத் தவிர்க்கக் கூடிய சூழிநிலைதற்போது ஏற்பட்டுள்ளது. காஸ்டஸ் பிக்டஸ் என்ற இன்சுலின் தாவரத்தின் இலை ஒன்றை தினந்தோறும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டாலே போதுமானது என்று கூறுகிறார்கள். இந்த தாவரத்தை தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படக் கூடிய மாற்றங்கள் குறித்து முழுமையாக ஆராய்ச்சி செய்து வரும் ஐரோப்பியா மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் இன்சுலின் மருந்து விலங்கிலிருந்தும், சின்தடிக் முறையிலும் தான் தயாரிக்கப் படுகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு இதைவிட மாற்று மருந்து ஏதும் இல்லை. இன்சுலின் மருந்து மாத்திரை வடிவிலோ, திரவ மருந்தாகவோ இன்னும் கண்டு பிடிக்க வில்லை. ஊசிமட்டுமே ஒரே வழியாகும். ஆனால் சர்க்கரை நோய் ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு காஸ்டஸ்பிக்டஸ் அதிக பலன்களைத் தருகிறது என தங்கள் ஆய்வில் குறிப்பிட்டுள்ளனர். ஆய்வுக் கட்டுரை-Pharmacology Study
தாவரத்தின் இலைகளிலிருந்து பெறப் படும் சாறு இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப் படுத்துவதோடு இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற ஆவலையும் படிப்படியாக்க் குறைக்கிறது.ANTI_Diabetic herb.
பல்லாண்டு பயிரான காஸ்டஸ் பிக்டஸ் தாவரத்தின் இலை சாப்பிட்டால் எத்தகைய பின் விளைவிகளும் ஏற்படுவது இல்லை என்று ஆராய்ச்சியில் நிரூபிக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் இன்சுலின் ஊசி போடுவது கட்டாயமில்லை என்ற நிலையில் சர்கரை நோயாளிகள் பயன் அடைவார்கள்.
புதன், 30 ஜனவரி, 2013
நிப்ட் ( NIFT ) விண்ணப்பிக்கும் நேரம் இது.
நிப்ட் ( NIFT ) விண்ணப்பிக்கும் நேரம் இது.
1986ம் ஆண்டு, நிப்ட் மையம் டெல்லியில் மட்டுமே இருந்தது. ஆனால், இன்று அந்த எண்ணிக்கை 15ஆக உயர்ந்துள்ளது.
வடிவமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை ஆகிய துறைகளில், இளநிலை, முதுநிலை மற்றும் டாக்டோரல் படிப்புகள் வரை இவர்கள் வழங்குகிறார்கள்.
நிப்ட் மையங்கள் பேஷன் மற்றும் டெக்ஸ்டைல் டிசைன் ஆகிய படிப்புகளைத் தாண்டி, தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை சார்ந்த படிப்புகளும் வழங்கப்படுகின்றன. இவை பேஷன் படிப்புடன், துணைப் பாடங்களாக வழங்கப்படுகின்றன.
மேலும் அவை கீழ்காணும் பட்டங்களை வழங்குகின்றன.
பேச்சுலர் ஆப் டிசைன்(B Des.)
இது 4 வருட படிப்பாகும். இதில், பேஷன் டிசைன், லெதர் டிசைன், அக்சசரி டிசைன், டெக்ஸ்டைல் டிசைன், நிட்வேர் டிசைன் மற்றும் பேஷன் கம்யூனிகேஷன் போன்ற அம்சங்கள் அடங்கும்.
பேச்சுலர் இன் பேஷன் டெக்னாலஜி(B.F.Tech)
அப்பாரல் ப்ரொடக்ஷன். இது 4 வருட படிப்பாகும்.
மாஸ்டர் ஆப் டிசைன்(M.Des) - டிசைன் ஸ்பேஸ்
எம்.எப்.,டெக் - மாஸ்டர்ஸ் இன் பேஷன் டெக்னாலஜி
எம்.எப்.எம் - மாஸ்டர்ஸ் இன் பேஷன் மேனேஜ்மென்ட்.
எப்போது? எவ்வாறு விண்ணப்பிக்கலாம்?
இந்த 2013ம் ஆண்டில் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இப்போது பொதுப் பிரிவுக்கு ரூ.1,100ம், SC/ST/PHP பிரிவுக்கு ரூ.550ம் விண்ணப்பக் கட்டணமாக வசூலிக்கப்படுகின்றன.
படிப்பு பற்றிய அனைத்து விபரங்களையும் கொண்ட Prospectus -ஐ, டவுன்லோடு செய்யwww.applyadmission.net/nift2013/Prospectus2013.pdf. இங்கு கிளிக்கவும்.
நுழைவுத்தேர்வு எப்படி இருக்கும் ?
இளநிலை மற்றும் முதுநிலைப் படிப்புகளில் சேரக்கூடிய மாணவர்கள், ரெண்டு பிரிவுகளில், பேப்பர் வழியிலான தேர்வுகளை எழுத வேண்டும். General Ability தேர்வானது(GAT), Quantitative ability, Communication ability, English comprehension, Analytical ability, General knowledge and Current affairs போன்ற அம்சங்களைக் கொண்டிருக்கும்.
Creative Ability தேர்வானது(CAT), உங்களின் படைப்பாக்க மற்றும் புத்தாக்க திறன்களை சோதிக்கிறது.
மேற்கூறிய 2 தேர்வுகளில், செயல்பாடு கணக்கிடப்பட்டு, 6,000 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இவர்கள், Material handling test என்ற ஒரு தேர்வில் பங்குகொள்ள வேண்டும். இந்த தேர்வில், மாணவர்களுக்கு மெட்டீரியல்கள் வழங்கப்படும். அதை வைத்து, கொடுக்கப்பட்ட விளக்கத்திற்கேற்ற மாடலை அவர்கள் உருவாக்க வேண்டும்.
இளநிலை மற்றும் முதுநிலைகளில், தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை படிப்புகளுக்கு நடத்தப்படும் GAT தேர்வானது, கூடுதல் அம்சங்களைக் கொண்டுள்ளது. இது கேஸ் ஸடடி ஆகும் ஆனால் கிரியேடிவ் டெஸ்ட் அல்ல. அனைத்து முதுநிலைப் படிப்புகளிலும் சேர, குழு கலந்தாய்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றை கடக்க வேண்டும். இவற்றுக்கு 30% வெயிட்டேஜ் மதிப்பெண்கள் உண்டு.
மேலும் விரிவான விவரங்களுக்கு கீழ்காணும் வலைமுகவறியைப் பார்க்கவும்.
(http://www.nift.ac.in), தமிழில் .
செவ்வாய், 29 ஜனவரி, 2013
திங்கள், 28 ஜனவரி, 2013
திருநீறு மற்றும் சந்தனம் அணிவது ஏன்.? அறிவியல் உண்மை.!!
திருநீறு மற்றும் சந்தனம் அணிவது ஏன்.? அறிவியல் உண்மை.!!
அறுகம்புல்லை உண்ணுகின்ற பசுமாட்டின் சாணத்தை எடுத்து உருண்டையாக்கி வெயிலில் காயவைக்க வேண்டும். பின் இதனை உமியினால் மூடி புடம் போட்டு எடுக்க வேண்டும். இப்போது இந்த உருண்டைகள் வெந்து நீறாகி இருக்கும். இதுவே உண்மையான
திருநீறாகும்.இது நல்ல அதிர்வுகளை மட்டும் உள்வாங்கும் திறன் கொண்டது. எம்மைச் சுற்றி அதிர்வுகள் இருக்கின்றன என்பது யாவரும் அறிந்ததே. எம்மை அறியாமலே அதிர்வுகளின் மத்தியில்த் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எமது உடலானது இவ் அதிர்வுகளை ஏற்றுக் கொள்ளுகின்றது. திருநீறானது நல்ல அதிர்வுகளை ஏற்றுக் கொள்ளும் தன்மை வாய்ந்தது. அந்தவகையில் உடலின் முக்கிய பாகங்களில் திருநீறு இட்டுக் கொள்ளும் வழக்கம் இந்துமதத்தவர்களிடம் காணப்படுகின்றது.
இதைவிட மனித உடலிலே நெற்றி முக்கிய பாகமாகக் கருதப்படுகின்றது. அந்த நெற்றியிலேயே வெப்பம் அதிகமாகவும் வெளியிடப்படுகின்றது, உள் இழுக்வும்படுகின்றது. சூரியக்கதிர்களின் சக்தியை இழுத்து சரியான முறையில் உள்ளனுப்பும் அற்புதமான தொழிலை திருநீறு செய்யும் அதனாலேயே திருநீறை நெற்றியில் இடுவார்கள்.
தனது உடலிலே சாம்பல் சத்துக் குறைந்துவிட்டால், இலங்கை போன்ற வெப்பமான நாடுகளில் வளரும் கோழி இனங்கள் சாம்பலிலே விழுந்து குளிப்பதைக் கண்டிருப்பீர்கள். புறவை இனமே தன் தேவை தெரிந்து சாம்பலை நாடுகின்றதல்லவா! அதே போல்த்தான் மனிதனும் தன் மூட்டுவலி தோற்றுவிக்கும் இடங்களில் நீர்த்தன்மையை உறிஞ்சவல்ல திருநீற்றை அணிகின்றான். பசுமாட்டுச்சாணத்தை எரித்து திருநீறு செய்கின்றார்கள். மாடு அறுகம்புல் போன்ற பலவகையான புல்வகைகளை உண்டு தனது உடலைத் தேற்றிச் சாணம் போடும். அச்சாணம் தீயிலிடப்படும் போது ஏற்படும் இரசாயண மாற்றங்கள் உடலுக்கு மருத்துவத்தன்மையைக் கொடுக்கின்றது.
இதைவிட இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள பகுதியில் மிக நுண்ணிய நரம்பு அதிர்வலைகளை உள்ளன. அதனால் அந்த இடத்தைப் பயன்படுத்தி மனவசியம் இலகுவாகச் செய்யமுடியும். அதனாலேயே மனவசியத்தைத் தடுக்க அந்த இடத்தில் திருநீறு, சந்தனம் போன்றவை இடப்படுகின்றன. சந்தனம் நெற்றியில் வெளியிடப்படும் வெப்பத்தை நீக்குகின்றது. அதிகமான வெப்பம் கூடிய நாடுகளில் ஞாபகங்கள் முதலில் பதியப்படல், திட்டமிடல் போன்றவற்றிற்குத் தொழிற்படுகின்ற நெற்றிப்பகுதியிலுள்ள frontal cortex என்னும் இடத்தில் அணியப்படும் சந்தனமானது வெப்பம் மிகுதியால் ஏற்படும் மூளைச்சோர்வை நீக்குகின்றது.
சந்தனம் இரு புருவங்களுக்கும் இடையில் இடுகின்ற போது, முளையின் பின்பகுதியில் ஞாபகங்கள் பதிவுசெய்து வைத்திருக்கும் Hippocampus என்னும் இடத்திற்கு ஞாபகங்களை சிறப்பான முறையில் அனுப்புவதற்கு இந்த frontal cortex சிறப்பான முறையில் தொழிற்படும். உடலுக்குக் குளிர்ச்சியூட்டும் சந்தனத்தை நெற்றியிலும் உடலின் பல பாகங்களிலும் இந்து சமயத்தவர் அணிந்திருக்கும் காட்சி நகைச்சுவையாகப் பார்வைக்குத் தோன்றினாலும் அற்புதமான காரணமும் அதில் உண்டு பார்த்தீர்களா!
நெற்றியின் இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள நெற்றிப் பொட்டிலே பட்டும்படாமலும் சுண்டுவிரலை நேராகப்பிடித்தால் மனதில் ஒருவகை உணர்வு தோன்றும். அந்த உணர்வை அப்படியே வைத்துத் தியானம் செய்தால் மனஒருமைப்பாடு தோன்றும், சிந்தனை தெளிவுபெறும், எதையும் தெளிவாகப் புரிந்து கொள்ளும் நிலை தோன்றும். அந்த நெற்றிப் பொட்டு குளிர்ச்சியுடன் இருக்க வேண்டாமா? இதற்குச் சந்தனம் சரியான மருந்து.
இந்த உண்மைகளைச் சாதாரணமாகக் கூறி விளங்கவைக்க முடியாத மக்களுக்கு நிலையில்லா வாழ்வின் நிலையை உணர்த்தி திருநீற்றை உடலில் அணிய வைத்திருக்கின்றார்கள். மதத்தைக் காட்டி விஞ்ஞான விளக்கத்தை மறைத்துக் கூறிய விளக்கங்களினால் மதம் வென்றது விளக்கம் மறைந்தது.
விபூதி இட்டுக் கொள்ளும் இடங்களும், பலன்களும்
1. புருவ மத்தியில்(ஆக்ஞா சக்கரம்) வாழ்வின் ஞானத்தை ஈர்த்துக் கொள்ளலாம்.
2.தொண்டைக்குழி(விசுத்தி சக்கரம்) நமது சக்தியை அதிகரித்துக் கொள்ளலாம்.
3.நெஞ்சுக்கூட்டின் மையப்பகுதி தெய்வீக அன்பைப் பெறலாம். மேலும், பூதியை எடுக்கும் போது, மோதிரவிரலால் எடுப்பது மிகவும் சிறந்தது. ஏனென்றால், நம் உடலிலேயே மிகவும் பவித்ரமான பாகம் என்று அதைச் சொல்லலாம். நம் வாழ்வையே கட்டுப்படுத்தும் சூட்சுமம் அங்கு உள்ளது.
நன்றி :புதிய உலகம்
You might al
இன்று காலை இந்த பாட்டை கேட்டுக்கொண்டிருந்தேன்.பாடலின் வரிகள் மிகவும் நன்றாக இருந்ததால் உங்களுக்காக் அந்த அர்த்தமுள்ள வரிகள்....
தூங்காதே தம்பி தூங்காதே தூங்காதே தம்பி தூங்காதே - நீயும்
சோம்பேறி என்ற பெயர் வாங்காதே
தூங்காதே தம்பி தூங்காதே
சோம்பேறி என்ற பெயர் வாங்காதே
தூங்காதே தம்பி தூங்காதே
நீ தாங்கிய உடையும் ஆயுதமும் - பல
சரித்திரக் கதை சொல்லும் சிறைக்கதவும்
நீ தாங்கிய உடையும் ஆயுதமும் - பல
சரித்திரக் கதை சொல்லும் சிறைக்கதவும்
சக்தி இருந்தால் உனைக்கண்டு சிரிக்கும்
சக்தி இருந்தால் உனைக்கண்டு சிரிக்கும்
சத்திரந்தான் உனக்கு இடங்கொடுக்கும்
தூங்காதே தம்பி தூங்காதே
சோம்பேறி என்ற பெயர் வாங்காதே
தூங்காதே தம்பி தூங்காதே
நல்ல பொழுதை எல்லாம் தூங்கிக் கெடுத்தவர்கள்
நாட்டைக் கெடுத்ததுடன் தானும் கெட்டார்
நல்ல பொழுதை எல்லாம் தூங்கிக் கெடுத்தவர்கள்
நாட்டைக் கெடுத்ததுடன் தானும் கெட்டார் - சிலர்
அல்லும் பகலும் தெருக் கல்லாய் இருந்து விட்டு
அதிர்ஷ்டம் இல்லை என்று அலட்டிக் கொண்டார்
அல்லும் பகலும் தெருக் கல்லாய் இருந்து விட்டு
அதிர்ஷ்டம் இல்லை என்று அலட்டிக் கொண்டார்
விழித்துக்கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்
ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆஆஆஆஆஆஆ
விழித்துக்கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார் உன் போல்
குறட்டை விடடோரெல்லாம் கோட்டை விட்டார்
தூங்காதே தம்பி தூங்காதே
சோம்பேறி என்ற பெயர் வாங்காதே
தூங்காதே தம்பி தூங்காதே
போர்ப் படைதனில் தூங்கியவன் வெற்றியிழந்தான்
போர்ப் படைதனில் தூங்கியவன் வெற்றியிழந்தான் - உயர்
பள்ளியில் தூங்கியவன் கல்வி இழந்தான்
கடைதனில் தூங்கியவன் முதல் இழந்தான் - கொண்ட
கடமையில் தூங்கியவன் புகழ் இழந்தான் - இன்னும்
பொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால் - பல
பொன்னான வேலையெல்லாம் தூங்குதப்பா
தூங்காதே தம்பி தூங்காதே
சோம்பேறி என்ற பெயர் வாங்காதே
தூங்காதே தம்பி தூங்காதே தம்பி தூங்காதே
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)




