செவ்வாய், 5 பிப்ரவரி, 2013

ஒழுக்கம் அவசியமா?


ஒழுக்கம் அவசியமா?

ஒழுக்கம் என்ற சொல்லே பல இளைஞர்களுக்கு கசப்பான சொல்லாகத் தெரிகிறது. வாழ்க்கையை வாழத் துடிக்கும் வயதில் வாழ்ந்து முடித்த கிழடுகள் தங்களுக்குப் போடும் அனாவசியக் கடிவாளமாக பல இளைஞர்கள் நினைக்கிறார்கள்.

வாழ்வது ஒரு முறை அதில் அத்தனை அனுபவங்களையும் சுகித்து விட வேண்டாமா என்று நினைக்கிறார்கள். உண்மையில் வள்ளுவர் காலத்திலிருந்து இன்றைய காலம் வரை ஒழுக்கத்திற்கு தேவைக்கும் அதிகமாக முக்கியத்துவம் தந்து விடுகிறோமா? விடைக்கு ஒரு கதை...

கதிர் ஒரு கட்டிளங்காளை. மிகவும் ஒழுக்கமானவன். எல்லா விஷயங்களிலும் கட்டுப்பாடுடையவன். தன் உடலை உடற்பயிற்சிகளாலும், யோகாசனங்களாலும் நன்கு பாதுகாக்கிறவன். அவன் ஒரு முறை தங்கள் யோகா வகுப்பினர் நடத்தும் ஒரு சொற்பொழிவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்க ஒரு புகழ்பெற்ற மருத்துவரைக் காணச் சென்றான். அந்த மருத்துவமனையில் கூட்டம் நிரம்பி வழிந்தது. அவரைக் காண அவன் காத்திருந்தான்.

அப்போது அந்த மருத்துவமனைக்கு தள்ளாத வயதுடைய முதியவர் ஒருவர் நுழையக் கண்டான். அந்த வயதிலும் அந்த முதியவர் கைத்தடி எதுவும் இல்லாமல் மருத்துவமனைக்கு தனியாக வந்தது அவனுக்கு வியப்பை அளித்தது. அவர் அவனருகே அமர்ந்தார். மருத்துவரைப் பார்க்க நேரம் அதிகமானதால் பொழுதைப் போக்க இருவரும் பேசிக்கொண்டார்கள்.

அந்த முதியவர் அவனிடம் ஒரு கட்டத்தில் கேட்டார். "நீ புகை பிடிப்பதுண்டா?"

கதிர் பெருமையாகச் சொன்னான். "இல்லை"

அவர் சொன்னார். "நான் தினமும் மூன்று பேக்கட் சிகரெட்டுகள் புகைப்பேன். பன்னிரண்டாம் வயதில் ஆரம்பித்த பழக்கம் அது. நீ மது குடிப்பதுண்டா?"

கதிர் சொன்னான். "இல்லை"

அவர் பெருமையாகச் சொன்னார். "நான் பதினாறாம் வயது முதல் மது குடிக்கிறேன். தற்போது தினந்தோறும் இரண்டு முறை இரண்டு புட்டி மதுவைக் காலையிலும், இரவிலும் குடிப்பேன்."

கதிருக்கு வியப்பாக இருந்தது.

முதியவருடன் பேசிக் கொண்டே போனதில் அவருக்கு இல்லாத தீயபழக்கங்கள் இல்லை என்று கதிருக்குத் தெரிந்தது. முதியவர் வாழ்க்கையில் எல்லாவற்றையும் முழுமையாக அனுபவித்து விட வேண்டும் என்ற வெறியுடன் இருப்பவராகத் தெரிந்தார். எதிலும் எப்போதும் கட்டுப்பாடில்லாமல் அனுபவித்து இத்தனை வருடங்கள் வாழ்ந்த அவர் அவனை ஆச்சரியப்படுத்தினார். ஒவ்வொன்றிலும் கட்டுப்பாடோடு வாழ்ந்ததன் மூலம் நிறைய இழந்து விட்டோமா என்று கூட கதிருக்குத் தோன்ற ஆரம்பித்தது.

"இப்போது எதற்காக மருத்துவரைப் பார்க்க வந்திருக்கிறீர்கள்?" என்று கதிர் கேட்டான்.

சில நாட்களாக மூச்சுத் திணறல், நரம்புத்தளர்ச்சி, பலவீனம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக முதியவர் கூறினார். இந்த வயதில் இது பெரிய விஷயமல்ல என்று நினைத்த கதிர் ஆவலுடன் அவர் வயதைக் கேட்டான்.

அவர் சொன்னார். "27"

இவ்வளவு நேரம் தன்னுடன் பேசிக் கொண்டிருந்தவர் முதியவரே அல்ல, இளைஞர் தான் என்று தெரிந்த கதிர் அதிர்ச்சி அடைந்தான். இது தான் ஒழுக்கமில்லாத வாழ்க்கையின் முடிவு.

திருவள்ளுவர் ஒழுக்கத்தின் அவசியத்தை ரத்தினச் சுருக்கமாக பல குறள்களில் கூறியுள்ளார். அவற்றுள் சில-

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப்படும்.
(ஒழுக்கமே எல்லோருக்கும் மேன்மையைத் தருவதால் அந்த ஒழுக்கம் உயிரையும் விடச் சிறந்ததாகப் போற்றப்படும்)

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பைத் தரும்.
(நல்லொழுக்கம் இன்பமான நல்வாழ்க்கைக்குக் காரணமாக இருக்கும். தீயொழுக்கம் எப்போதும் துன்பத்தைத் தரும்)

பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அ·தே துணை.
(ஒழுக்கத்தை வருந்தியும் போற்றிக் காக்க வேண்டும். பலவற்றையும் ஆராய்ந்து போற்றித் தெரிந்தாலும் உண்மையில் அந்த ஒழுக்கமே வாழ்க்கையில் துணையாக நிற்கும்)

இந்தக் குறள்களின் கருத்துகளுக்கு எத்தனையோ உயிருள்ள உதாரணங்களை இன்றும் நம்மால் பார்க்க முடியும். எத்தனையோ அறிவாளிகள், புத்திசாலிகள் கூட ஒழுக்கம் என்ற ஒரு விஷயத்தில் தவறி விட்டு தீய பழக்கங்களுக்கு அடிமையாகி வாழ்க்கையையே கோட்டை விட்டு நிற்பதை நம்மால் காண முடியும். அவர்களை விடக் குறைந்த அறிவிருந்தாலும், குறைந்த கல்வியே பெற்றிருந்தாலும் ஒழுக்கமாக இருப்பவர்கள் எத்தனையோ நிம்மதியாகவும், நிறைவாகவும் வாழ்வதையும் நாம் காணலாம்.

ஒழுக்கத்துடனும், கட்டுப்பாட்டுடனும் இருப்பது ஆரம்பத்தில் கஷ்டமாக இருக்கலாம். ஆனால் முடிவில் அது பெரிய பாதுகாப்பு வளையமாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. அதே போல் ஒழுக்கமின்மை ஆரம்பத்தில் கிளர்ச்சிகளைத் தரலாம். கடைசியில் அது எத்தனையோ பிரச்னைகளுக்கு வேராக நின்று துன்புறுத்தும் என்பதிலும் சந்தேகமில்லை.

ஒழுக்கமான வாழ்க்கை ஏதோ உப்புசப்பில்லாத வாழ்க்கை என்பது போல் சிலர் உருவகப்படுத்தி விடுகிறார்கள். அதில் சிறிதும் உண்மை இல்லை.

ஒழுக்கமான வாழ்க்கையில் உண்மையான ஆனந்தத்திற்குக் குறைவில்லை. நல்ல வழியிலேயே இங்கு ஆனந்தம் ஏராளமாக இருக்கிறது. நல்ல இசையிலும், நல்ல புத்தகத்திலும், நல்ல வாழ்க்கைத் துணையிலும் கிடைக்காத ஆனந்தமா புகையிலும், மதுவிலும், தவறான உடலுறவிலும் கிடைத்து விடப்போகிறது? அழகான இயற்கைக் காட்சிகளிலும், மழலைகளின் பேச்சுகளிலும் கிடைக்காத மகிழ்ச்சியா போதையில் கிடைத்து விடப்போகிறது?

மேலும் நல்ல வழிகளில் கிடைக்கும் ஆனந்தம் முடிவில் மனிதனை உயர்த்தி விடுகிறது. தீய வழிகளில் கிடைக்கும் கிளர்ச்சிகள் கடைசியில் மனிதனின் தரத்தை தாழ்த்தி விடுகிறது. இன்னொரு உண்மை என்னவென்றால் ஒழுக்கமாக வாழ்பவன் தான் மட்டுமல்லாமல் தன் குடும்பத்தாரையும், தன்னைச் சேர்ந்தவர்களையும் கூட நிறைவாக இருக்க விடுகிறான். அதே சமயம் ஒழுக்கமில்லாதவன் தன் குடும்பத்தினருக்கும், தன்னைச் சேர்ந்தவர்களுக்கும், தீராத மன உளைச்சலை ஏற்படுத்தி விடுகிறான்.

நம்மையும் உயர்த்தி, நம்மைச் சார்ந்தவர்களையும் நிம்மதியாக இருக்க விடும் ஒழுக்கம் மேன்மையா? இல்லை நம்மை சீரழித்து, நம்மைச் சேர்ந்தவர்களைத் துயரத்தில் ஆழ்த்தும் ஒழுக்கமில்லாத வாழ்க்கை தேவையா?

சிந்தித்துப் பார்த்து பதில் சொல்லுங்கள். ஒழுக்கம் அவசியமா? இல்லையா?

படிப்பது எப்படி? படிப்பதை நினைவில் நிறுத்துவது எப்படி?


படிப்பது எப்படி? படிப்பதை நினைவில் நிறுத்துவது எப்படி? தேர்வுகளில் வெற்ற பெறுவது எப்படி?

இவைகள் பற்றிய குறிப்புகள் ஏராளம் உண்டு. இவையாவும் மென்பொருள் வன்பொருள் சம்பந்தப்பட்டவை. நினைவுத்திறன் மேம்பட மூளை நன்கு செயல்பட சில குறிப்புகள்.

மாணவர்கள் தேர்வு நடக்கும் காலங்களில் வழக்கத்திற்கு மாறான மனநிலையில் இருப்பார்கள். எப்போதையும் விட அதிக அன இறுக்கம், குறைவான தூக்கம், அதிக நேரம் படிப்பு என்று ஒருவிதபோராட்ட சூழ்நிலையில் பதட்டத்தோடு காணப்படுவார்கள்.

உண்ணக்கூடாதது :

இப்படி குறைவான தூக்கம், கூடுதலான மன இறுக்கம் இவை உடலில் செரிமானத் தன்மையை பாதிக்கிறது. எனவே இது போன்ற வேளைகளில் கடினமான உணவுகளை எடுத்துக்கொள்ளக்கூடாது. அதிக உணவை, கடின உணவை உண்ணும் போது வயிற்றுக்கு அதிக ரத்தம் பாய்வதால் மூளையின் செயல்திறன் பாதிப்படைகிறது. எனவே, எண்ணெய் பதார்த்தங்களை தொடக்கூடாது. காரம், மசாலாக்கள் அதிகமான உணவுகளில் கை வைக்கக்கூடாது. குறிப்பாக நிலக்கடலை உண்பதை தவிர்க்க வேண்டும். அதிக தாகத்தை உருவாக்கும் இட்லி, தோசைகளை குறைத்துக் கொள்ள வேண்டும். அதிக புளிப்பு உள்ள தயிர் தவிர்க்கப்பட வேண்டும்

எடுத்துக்கொள்ள வேண்டியவை :

காலையில் சாத்துக்குடி, ஆரஞ்சு, திராட்சை, தர்பூசணி இவற்றின் சாறுகளில் தேன் கலந்து குடிக்கலாம். அதன்பின் சத்துமாவு, கஞ்சி, ஓட்ஸ், கம்பு, ராகி, கோதுமை, அரிசி இவற்றில் ஏதாவது ஒன்றின் கஞ்சியை அருந்தலாம். மதியம் பருப்பு, கீரை இவற்றை வேகவைத்து கடைந்து சாதத்துடன் சேர்த்து உண்ணலாம். இரவு வேளை வாழைப்பழம், பப்பாளி, ஆப்பிள் பழங்களின் கலவையை (சாலட்) உண்ணலாம். படிக்கும் வேளைகளில் தேவைப்பட்டால் உலர் திராட்சை எடுத்துக்கொள்ளலாம். பேரீச்சம்பழம், பாதாம் பருப்பின் பொடியும் கலந்து உண்ணலாம். இவைகள் எளிதாக செரிமானம் ஆகும். அதே வேளையில் மூளைக்கு வேண்டிய சத்துக்களை கொடுக்கும்.

பதட்டம் குறைய :

தேர்வு வேளைகளில் ஒருவித பதட்டமும், பயமும் மனதில் கூத்தாடும். இதை குறைக்கவும், மனம் அமைதியாக செயல்படவும், நரம்பு மண்டலங்கள் சிறப்பாக இயங்கவும். மூளைக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்கவும், நாடி சுத்தி பிராணயாமம் மூன்று நிமிடம் தினமும் இரண்டு வேளை செய்யலாம். ஒரு மணி நேரம் தொடர்ச்சியாக படித்தப்பின் ஐந்து நிமிட இடைவேளை எடுத்துக்கொண்டு, ஒரு சின்ன நடை போடலாம், குதிக்கலாம். சூரிய நமஸ்காரம் செய்யலாம் அல்லது தண்டால் செய்யலாம். இவைகள் உடலின் ரத்த ஓட்டம்

சிறப்பாக செயல்பட உதவும். ஒவ்வொரு முறையும் படிக்க அமரும் முன் முகம் கை கால்களைக் கழுவி துடைத்து விட்டு செல்ல வேண்டும். இதுவும் உடலுக்கும் மூளைக்கும் புத்துணர்ச்சியைக் கொடுக்கும். அப்போது நரம்பு மண்டலங்கள் உற்சாகமடையும். மன ஒருமைப்பாடு, நினைவுத் திறன் கூடும். தேர்வு நேரத்தில் இப்படி நேரத்தை வீணாக்கலாமா என்று தோன்றலாம். நாம் செலவு செய்யும் இந்த சில நிமிடங்கள் நிச்சயமாக படிக்கும் திறனை மேம்படுத்தும்.

தேர்வு எழுதச் செல்லும் வேளையிலே:

தேர்வு எழுதச் செல்லும் போது, பதட்டமும், இதயத்தின் படபடப்பும் கூடும். சிலருக்கு இந்த பதட்டம் கூடுதலாகவும், சிலருக்கு குறைவாகவும் இருக்கலாம். எல்லாம் நன்றாக படித்து விட்டோமா? தெரிந்த கேள்விகள் வருமா? பதில் நன்றாக எழுத முடியுமா? மதிப்பெண்கள் என்னவாகுமோ? என்ற எண்ணங்கள் பொங்கும். இறைவன் மீது நம்பிக்கையுடன் உங்களது ஒரு காலையும், உங்கள் மீது நம்பிக்கையுடன் உங்கள் மறுகாலையும் எடுத்து வைத்து உற்சாகத்தோடு தேர்வு அறைக்கு கம்பீரமாக செல்லுங்கள்.

எது வந்தாலும் வரட்டும் எதிர் கொள்வேன், வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கையோடும், உற்சாகத்தோடும் தேர்வை எதிர்கொள்ள வேண்டும். அப்போது யாவும் நல்லபடியாக நடக்கும். வெற்றி நிச்சயம். உங்கள் வெற்றிக்கும் உயர்வான எதிர்காலத்திற்கும் எமது வாழ்த்துக்கள்.

ஞாயிறு, 3 பிப்ரவரி, 2013

ப்ளஸ் டூ முடித்த பிறகு, என்ன படிக்கலாம்?


யாருக்கு என்னென்ன படிப்பு….? ஓர் அலசல் !

ப்ளஸ் டூ முடித்த பிறகு, என்ன படிக்கலாம்? இப்போது எந்த படிப்புக்கு நல்ல மவுசு? இன்றைக்கு மவுசுள்ள அந்தப் படிப்பை முடிக்கும்போது நாளைக்கு வேலைக்கான வாய்ப்பு எப்படி இருக்கும்?
ப்ளஸ் டூ தேர்வை எழுதவிருப்பவர்கள், அவர்களின் பெற்றோர், அக்கம் பக்கத்தினர், நண்பர்கள் என்று எல்லோரையும் சுற்றிச் சுற்றி எப்போதுமே எழும் கேள்விகள்தான் இவை.

கேள்விகள் பழையதென்றாலும், பதில்களைப் புதுசாக்குகிறது காலம்!
ப்ளஸ் டூ-வுக்குப் பின் மேற்படிப்பை தொடர்வோரின் தற்போதைய நிலவரம், 40 சதவிகிதம். இதில் 10 சதவிகிதத்தினர் மட்டுமே அதிக மதிப்பெண்களோடும், பொருளாதாரத்தில் தேறியவர்களாகவும் இருக்கிறார்கள். இந்த 10 சதவிகிதத்தினர்தான் பொறியியல், மருத்துவம் போன்ற படிப்புகளைப் பற்றி யோசிக்கத் தலைபடுகிறார்கள். மீதமுள்ள 30 சதவிகிதத்தினர், ‘ஏதோவொரு படிப்பில் சேர்வோம். அதை முடித்த பிறகு கிடைக்கும் ஏதோ ஒரு வேலையில் தொற்றிக்கொண்டு வாழ்வை செலுத்துவோம்என்ற முடிவுக்குத் தள்ளப்படுகிறார்கள்.
உண்மையில் குறைந்த செலவில், அதிக காலவிரயமின்றி படிப்பை முடித்ததுமே கையில் வேலையைக் கொடுக்கும் கோர்ஸ்கள் ஏராளமாக இருக்கின்றன. அவற்றைத் தெரிந்து கொள்வது அந்த 30 சதவிகிதத்தினருக்கு மட்டுமல்ல மேற்படிப்பை பற்றியே யோசிக்காத மீதமுள்ள 60 சதவிகிதத்தினரில் கணிசமானவர்களுக்கும் பயன்படக்கூடும். குறிப்பாக பெண்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்.
நம் நாட்டில் விவசாயத்தை அடுத்து, அதிகப்படி வேலை வாய்ப்புகள் டெக்ஸ்டைல்ஸ்துறையை முன்னிறுத்தி வளர்கின்றன. அப்பேரெல் பிராண்டிங்’ (Apparel Branding) எனப்படும் ஆயத்த ஆடைப் பயிற்சியின் கீழ், விற்பனை (Apparel Merchandising), ஆயத்த ஆடைகளில் மேம்பாடு (Apparel Product Development), தர உத்தரவாதம் (Apparel Quality Assurance)என சுவாரஸ்யமான தலைப்புகளில் ஏராளமான சான்றிதழ் படிப்புகள் இருக்கின்றன. மத்திய ஜவுளித்துறையின் கீழ் வரும் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி முன்னேற்றக் குழுமம் (AEPL-Apparel Export Promotion Council)நிதியுதவியுடன் இதற்கான பயிற்சிகள், வேலை வாய்ப்பு உத்தரவாதத்துடன் கிடைக்கின்றன.
இதற்கடுத்து எலெக்ட்ரானிக்ஸ், வெல்டிங் படிப்புகளில் ஐ.டி.ஐ. முடிக்கும் பெண்களுக்கு நல்ல வாய்ப்புகள் காத்திருக்கின்றன. புரொடக்டிவிடிக்காக இந்தப் பணிகளில் பெண்களுக்கு முன்னுரிமை அளித்து பல தொழில் நிறுவனங்கள் புதுமை செய்கின்றன. அதேபோல, பாலிடெக்னிக் கல்வி நிறுவனங்களில் தொழில் சார்ந்த படிப்புகளைப் பெறுபவர்களுக்கும் உத்தரவாதமுள்ள எதிர்காலம் இருக்கிறது.
பள்ளிப் படிப்பை ஆங்கிலம் வழியாக முடித்தவர்கள் மற்றும் ஆங்கில மொழித்திறன் ஈடுபாடு கொண்டவர்கள் பி.பி.ஓ. (BPO-Business Process Outsourcing), கே.பி.ஓ. (KPO -Knowledge Process Outsourcing), எல்.பி.ஓ. (LPO -Legal Process Outsourcing) போன்ற பயிற்சிகளைப் பெற்றால், உடனடி வேலைவாய்ப்பை பெறலாம். தொழில் முனைவோர் மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (Institute of Entrepreneurship and Career Development) மேற்கண்ட பயிற்சிகளை அதிக செலவில்லாமல் பெற உதவுகிறது.
உணவு மற்றும் உபசரிப்பில் தனிப் படிப்புகளும் சமீப ஆண்டுகளாக பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. உள்நாட்டில் மட்டுமல்ல, உலகமெங்கும் வேலை வாய்ப்போடு காத்திருப்பது இந்த உணவு மற்றும் உபசரிப்புத் தொடர்பான படிப்புகள்தான்.
பயோ இன்ஃபர்மேட்டிக்ஸ் (Bio Informatics) எனப்படும் உயிர்த் தகவலியல் படிப்புக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது. மாலிக்குலர் பயாலஜி துறையில் (Molecular Biology) புள்ளியியல் (Statistics) மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் பயன்பாடுகளை செலுத்தும் இந்தப் படிப்பானது சென்னை, அண்ணா பல்கலைக்கழகம், திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழக கல்லூரிகளில் தரப்படுகின்றன.
இதேபோன்ற அதிக கவனம் பெறாத இன்னொரு படிப்பு (GPS-Geographical Information System). இணைய வசதி எல்லோருக்கும் சாதாரணமாக கிட்டும் இந்தக் காலத்தில், அதன் மூலம் புவியமைப்புகளை மேப்களாக தரும் தொழில்நுட்பம் பிரபலமாகி வருகிறது. இதைக் கற்றுக்கொடுக்கும் இந்தப் படிப்பை முடிப்பவர்களுக்கு உடனடி வேலைவாய்ப்பு இருக்கிறது.
இன்ஷூரன்ஸ், முதலீட்டுத்துறை, பணிபுரிபவர் மற்றும் ஓய்வுபெறுபவர் நிதி நல விவகாரங்கள் போன்றவற்றை மையமாகக் கொண்டு உலகம் முழுமைக்கும் வேலைவாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் அவற்றுக்கு வழி செய்யும் (Actuarial Science) படிப்புகளை மேற்கொள்வதும் சிறப்பு”,
இந்த டிப்ளமா, சான்றிதழ் படிப்புகளை நேரடியாகவும் படிக்கலாம். அல்லது ஏதாவதொரு அடிப்படை டிகிரி படிப்பை முடித்துவிட்டு, அல்லது அதனுடன் இணையாக இவற்றையும் மேற்கொள்வது புத்திசாலித்தனமானது.
 பொறியியல் படிப்புக்கான இடங்கள் அதிகரிக்கப்பட்டிருப்பதும், நுழைவுக்கான நடைமுறைகள் தளர்த்தப்பட்டிருப்பதும் ஆவரேஜ், பிலோ ஆவரேஜ் மாணவர்களுக்குகூட இன்ஜினீயரிங் ஸீட் கிடைக்கும் வாய்ப்பை உறுதிப்படுத்தியிருக்கிறது. ஆனால், அவர்கள் கல்லூரியில் நுழைந்ததும் பாடச் சுமையால் திணறிப் போகிறார்கள். அப்படிப்பட்ட மாணவர்கள், ஏதாவதொரு அடிப்படை அறிவியல் பாடத்தை இளநிலை படிப்பாக முடித்துவிட்டு, பிறகு அதே படிப்பையொட்டிய பொறியியல் பாடத்தை தேர்ந்தெடுத்து படித்தால் அதிசயிக்கும் வகையில் சீக்கிரமே பிக்-அப் ஆகிறார்கள் (உதாரணமாக, பி.எஸ்சி. கெமிஸ்ட்ரி முடித்து, கெமிக்கல் இன்ஜினீயரிங் சேர்வது). இவர்களுக்கு நேரடியாக இரண்டாமாண்டில் அட்மிஷன் கிடைத்துவிடும். பொறியியல் படிக்க விரும்பும் ஆவரேஜ் மாணவர்கள் இம்மாதிரியான ஐடியாவை பின்பற்றினால், கல்லூரியில் சேர்ந்தது முதல் அரியர்களை சேர்த்துக் கொண்டே வராமல் நிறைவான, நிதானமான தேர்ச்சிகளைப் பெற முடியும்.
பொறியியலில் சிவில், மெக்கானிக், இ.சி.இ., இ.இ.இ, பி-ஆர்க் போன்ற படிப்புகள் என்றும் நிலையான வேலைவாய்ப்புக்குரியவை. ஏனெனில் நாட்டின் பொருளாதாரமும், உள்கட்டமைப்பு வசதிகளும் தொலைநோக்கு இலக்கில் சீராக பயணிப்பதால்ஸ என்றும் இந்தத் துறைகள் பசுமையாக இருப்பதுதான். சமீப ஆண்டுகளில் ஏற்பட்ட தொய்விலிருந்து மீண்டிருக்கிறது ஐ.டி. எனப்படும் தகவல் தொழில்நுட்ப துறை. அவரவர் தனி ஆர்வத்தைப் பொறுத்து இப்படிப்பைத் தேர்ந்தெடுத்து படிக்கலாம்.
தற்போது இந்திய ஆட்சிப்பணிக்கு தேர்வாகின்றவர்களில் கணிசமானோர் பி.இ., எம்.பி.பி.எஸ். முடித்திருப்பதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். வரவேற்புக்குரிய இந்த மாற்றத்துக்காக தொழிற்கல்வி படிப்போர் துவக்க வருடத்தில்இருந்தே ஐ.ஏ.எஸ். தயாரிப்பையும் சேர்த்துக் கொள்ளலாம்.
மைக்ரோபயாலஜி, பயோடெக்னாலஜி போன்ற படிப்புகளை பொறியியலில் படிப்பதைவிட, கலை அறிவியல் கல்லூரி மூலம் பெறுவதே நல்லதென சில நடைமுறை உதாரணங்கள் காட்டுகின்றன. பிரபல பயோகான்நிறுவனத்தின் கிரண் மஜூம்தர் ஷாவின் கருத்தும் இதுவே. இவர் தனது நிறுவனத்துக்கான வேலை வாய்ப்பில் கலை அறிவியல் கல்லூரிகளில் பயோடெக் பட்டம் பெற்றவர்களுக்கே முன்னுரிமை தந்திருக்கிறார்.
இந்த பயோடெக் படிப்பை இளநிலை, முதுநிலை எனத் தனித்தனியாக படிப்பதற்கு பதில் ஒருங்கிணைந்த முதுநிலை படிப்பாக (Integrated Course) பெறலாம். ஒரே வீச்சில் படிக்கும்போது, மாணவருக்கு கிடைக்கும் தெளிவும் சிறப்பாக அமையும்என்ற சுகுமாரன்,
புதுமையையும், சவால்களையும் விரும்பும் புத்திசாலி மாணவர்களுக்கு ஏரோநாட்டிக்ஸ் (Aeronantics), ஸ்பேஸ் டெக்னாலஜி (Space technology) படிப்புகள் காத்திருக்கின்றன. இப்படிப்புகளை ஏதோ ஒரு நிறுவனத்துக்கு பதில் ஐ.ஐ.டி., அண்ணா பல்கலைக்கழகம் போன்ற தரமான கல்வி நிறுவனங்களில் பயில்வது வேலை வாய்ப்பை வரவேற்புடன் வசப்படுத்தும்.

சனி, 2 பிப்ரவரி, 2013

கொய்யாப்பழம் எதற்கு எல்லாம் பயன் படுகிறது .


கொய்யாப்பழம் எதற்கு எல்லாம் பயன் படுகிறது .

பழங்களிலேயேவிலைகுறைவானதும்அனைவராலும்எளிதில்வாங்கிஉண்ணக்கூடியதுமானகொய்யாப்பழத்தின்.முக்கியஉயிர்சத்துக்களும்,தாதுஉப்புக்களும்அடங்கியுள்ளன.கொய்யாமரத்தில்இருந்துகிடைக்கக்கூடியகனிமட்டுமல்லாதுஇலை,பட்டயைஎனஅனைத்துமேமருத்துவகுணம்கொண்டுள்ளது.வைட்டமின்பிமற்றும்வைட்டமின்சிஆகியஉயிர்ச்சத்துக்களகொய்யாப்பழத்தில்அடங்கியுள்ளன. கால்சியம்பாஸ்பரஸ் .

இரும்புபோன்றதாதுஉப்புக்களும்இதில்காணப்படுகின்றன.நம்உடலுக்குவேண்டியநல்லசத்துக்கள்தரும்பழங்களில்கொய்யாப்பழம்முக்கியமானகொய்யாபச்சைநிறத்திலும்ஒருசிலவகைகள்மஞ்சள்நிறத்திலும்நல்லநறுமணத்துடன்கிடைக்கும். கொய்யாமரங்கள்சுமார் 33 அடிஉயரம்வரைவளரும். கொய்யாவின்பச்சைப்பசேலென்றஇலைகள்நறுமணத்துடன்காணப்படும். விதையில்லாதகொய்யாப்பழங்களும்உள்ளன. உஷ்ணப்பிரதேசங்களில்அதிகமாகவிளையும்கொய்யாப்பழங்கள்நல்லநறுமணம்மற்றும்இனிப்புச்சுவையுடன்சாப்பிடுவதற்குமிகவும்உகந்தது.மருத்துவகுணங்கள்து.

கொய்யாமரத்தின்வேர், இலைகள்,

பட்டைமற்றும்செங்காய்இவைகளில்மருத்துவகுணங்கள்அடங்கியுள்ளன. குடல், வயிறு, பேதிபோன்றஉபாதைகளுக்குஇவைபெரிதும்குணமளிக்கின்றன.
கொய்யாமரத்தின்இலைகளைஅரைத்துகாயம்புண்இவற்றின்மேல்தடவினால்அவைவிரைவில்ஆறிவிடும்கொய்யாஇலைகள்அல்சர்மற்றும்பல்வலிநீங்கவும்உதவுகின்றன.
கொய்யாவுக்குசர்க்கரையைக்குறைக்கும்தன்மையுண்டுகொய்யாக்காய்களைதொடர்ந்துசாப்பிட்டுவந்தால்இரத்தத்திலுள்ளசர்க்கரையின்அளவுபெருமளவுகுறையவாய்ப்புகள்இருப்பதாககண்டறியப்பட்டுள்ளது.
கொய்யாஇலைகள்மூலம்தயாரிக்கப்படும்கஷாயம்இருமல்தொண்டைமற்றும்இருதயசம்பந்தமானநோய்களுக்குதீர்வுதருகின்றன. கொய்யாமரத்தின்இளம்புதுக்கிளைகளின்மூலம்தயாரிக்கப்படும்கஷாயம்காய்ச்சலைக்கட்டுப்படுத்தும்.
வேறுஎந்தப்பழத்திலும்இல்லாதவைட்டமின்சிஎன்றஉயிர்ச்சத்துஇப்பழத்தில்அதிகஅளவில்காணப்படுகிறது.
அதனால்வளரும்குழந்தைகளுக்குகொய்யாப்பழம்ஒருவரப்பிரசாதமாகும்.உடல்நன்குவளரவும்,எலும்புகள் பலம்பெறவும்கொய்யாப்பழம்உதவும்.யார்சாப்பிடுகிறோமோஇல்லையேகுடிகாரர்கள்தன்மனைவிக்குவாடைவரக்கூடாதுஎன்றுகொய்யாஇலைகளைதின்றுவிடுவார்கள்பேசினால்வாடைஅடிக்காதம் கிராமங்களில்பயன்படுத்துகிறார்களே!!!!


வெள்ளி, 1 பிப்ரவரி, 2013

ஐ.நா.வில் ஒலிக்கும் ஸ்வர்ணக் குரல்!

ஐ.நா.வில் ஒலிக்கும் ஸ்வர்ணக் குரல்!

'இறப்பதற்கு ஒரு நொடி துணிச்சல் போதும். ஆனால், வாழ்க்கையை வாழ்ந்து பார்ப்பதற்குத்தான் அதிகத் துணிச்சல் தேவை.'

பெரிய வார்த்தைகளைச் சர்வசாதாரணமாகச்  சொல்கிறார் ஸ்வர்ணலஷ்மி. விரைவில் ஐ.நா.சபையில் கணீர் என ஒலிக்கப்போகிறது பார்வையற்ற இந்தத் தோழியின் குரல்.

சென்னை, லிட்டில் ஃப்ளவர் கான்வென்ட்டில் 9-ம் வகுப்பு படிக்கும் ஸ்வர்ணலஷ்மி, மாநில அளவிலான குழந்தைகள் பாராளுமன்றத்தின் பிரதமர்.

''இந்தியாவின் பல மாநிலங்களில் குழந்தைகளை மட்டுமேவைத்து அமைக்கப்பட்டது இந்தக் குழந்தைகள் பாராளுமன்றம். தமிழகத்தில் எட்வின் என்பவரால் 1993-ல் நாகர்கோவிலில் தொடங்கப்பட்டு, சிறப்பாக இயங்கிவருகிறது. தமிழகத்தில் மட்டும் 15,000 குழந்தைகள் பாராளுமன்றங்கள் உள்ளன. சமூக ஆர்வலர்களின் மூலம் நடத்தப்படும் இந்தப் பாராளுமன்றங்களில் பிரதமர் மற்றும் பிற அமைச்சர்கள் வரை அனைவரும் பள்ளி மாணவர்களே'' என்கிறார் குழந்தைகள் பாராளுமன்ற ஒருங்கிணைப்பாளர் சூரியசந்திரன்.

குழந்தைத் திருமணம், பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிள்ளைகளை மீண்டும் பள்ளியில் சேர்ப்பது, தங்களது பிரச்னைகளைத் தாங்களே பேசித் தீர்வுகாண்பது என இந்தப் பாராளுமன்றங்களின் பணிகள் மகத்தானவை. இதன் மூலம் மாணவர்கள், தங்களது பள்ளிப் பருவத்திலேயே தன்னம்பிக்கையையும் ஆளுமைப் பண்பையும் வளர்த்துக்கொள்ள முடிகிறது.

'ஒவ்வொரு பாராளுமன்றத்திலும் தேர்தல் மூலமாக அமைச்சர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள். அப்படித் தேர்வுசெய்யப்பட்ட அமைச்சர்களில் ஒருவரை யாராவது ஒருவருக்கு உடன்பாடு இல்லை என்றாலும் உடனே எதிர்க்கலாம். அதற்கான காரணம் ஏற்புடையதாக இருக்கவேண்டும். இப்படி ஒருமனதாக அனைவரும் தேர்வுசெய்யப்படும் வரை தேர்தல்கள் நடத்தப்படும்'' என்கிறார் ஸ்வர்ணலஷ்மி.

இவ்வாறு அந்தந்தப் பகுதிகளில் தேர்வுசெய்யப்படும் அமைச்சர்கள் அடங்கிய பாராளுமன்றங்களின் கூட்டம் ஒவ்வொரு மாதமும் நடக்கும். அதில் சிறப்பாகப் பேசியவர்கள், செயல்பட்டவர்களை மாநில அளவிலான பாராளுமன்றத்திற்குத் தேர்வுசெய்வார்கள். இந்த மாநிலப் பாராளுமன்றத்துக்கு கடந்த ஆண்டு நிதி அமைச்சராகத் தேர்வுசெய்யப்பட்டார் ஸ்வர்ணலஷ்மி.

''நிதி அமைச்சராகச் செயலாற்றிய ஸ்வர்ணலஷ்மியின் திறமையைப் பாராட்டித் தற்போது பிரதமராக நியமித்து இருக்கிறார்கள். இந்தச் சமயத்தில்தான் ஐ.நா.சபையின் அறிவிப்பு வந்தது. இந்த வருடம் மார்ச் மாதம் ஐ.நா. சபையில் குழந்தைகள் பிரச்னைகளையும், அவர்களுக்கான பாதுகாப்பையும் பற்றி விவாதிக்கும் நிகழ்ச்சியில் உலக அளவிலான பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு பேச இருக்கிறார்கள். அதில் ஸ்வர்ணலஷ்மியும் ஒருவர்'' என்கிறார் சூரியசந்திரன்.

''பயமும் தயக்கமும்தான் நம்முடைய மிகப் பெரிய எதிரிகள். ஆரம்பத்தில் என்னிடம் பல விஷயங்களில் பயம், தயக்கம், பார்வை இல்லையே என்கிற வருத்தம் இருந்தது. சில்ரன்’ஸ் பார்லிமென்டில் சேர்ந்த பிறகு, தைரியமும் தன்னம்பிக்கையும் வளர்ந்தன. 'எந்தச் செயலையும் பளுவாக நினைக்காமல், புதிய கண்ணோட்டத்துடன் அணுகினால் ஜெயிக்கலாம்’ என்பதைக் கற்றுக்கொண்டேன். ஒவ்வொரு பாராளுமன்றக் கூட்டத்தின்போதும் எந்த மாதிரியான பிரச்னைகள் விவாதத்துக்கு வரும், அதற்கு எப்படிப் பட்ட தீர்வைச் சொன்னால் சரியாக இருக்கும்னு ஒரு முன் தயாரிப்போடு இருப்பேன்'' என்கிற ஸ்வர்ணலஷ்மி ஐ.நா.சபையில் பேசத் தயாராகிவருகிறார்.

'' 'உனக்கு ஐ.நா.சபையில் பேசும் வாய்ப்புக் கிடைச்சு இருக்கு’ என்று சொன்னபோது நான்  ரொம்ப சந்தோஷப்பட்டேன். என் தன்னம்பிக்கையை வளர்த்த குழந்தைகள் பாராளுமன்ற ஒருங்கிணைப்பாளர்கள், துணைநின்ற ஆசிரியர்கள், ஊக்கம்கொடுத்த நண்பர்கள், பெற்றோர்  அனைவரும் பெருமைப்படும் விதமாக ஐ.நா.சபையில் பேசுவேன். நமது இந்தியக் குழந்தைகளின் வளர்ச்சிக்குத் துணைசெய்யும் விவாதத்தை எடுத்துரைப்பேன்'' என்கிறார்.

ஸ்வர்ணாவின் குரல் உலக அளவில் ஓங்கி ஒலிக்கட்டும்!



சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் இன்சுலின் செடி







இன்சுலின் செடி.

1) மூலிகையின் பெயர் -: இன்சுலின் செடி.

2) தாவரப்பெயர் -: காஸ்டஸ் பிக்டஸ்

3) PLANT FAMILY: Costaceae

4) BOTANICAL NAME: Costus இக்நேஉஸ்

5) பயன் தரும் பாகம் -: இலை.

6) வளரியல்பு -: இந்தச் செடி வளமான ஈரப் பதம் உள்ள இடங்களில் நன்கு வளரக் கூடியது. இந்தத் தாவரம் ஈஞ்சி குடும்பத்தைச் சேர்ந்த தாவரம். மெக்சிகோ மற்றும் கோஸ்டாரிகா நாடுகளில் முக்கியத்துவம் வாய்ந்தது. இதன் தாயகம் அமரிக்காவின் புளோரிடா மாகாணம். இது பற்றி அறிந்த ஐரோப்பியர்கள் தற்போது இதன் பயனை முழுமையாக அனுபவித்து வருகின்றனர். கொச்சியிலும் தமிழகத்திலும் கன்னியாகுமரி யிலும் இந்த தாவரத்துக்கான நர்சரிகள் உள்ளன. நாம் இதை வீட்டுத் தோட்டங்களிலும் தொட்டிகளிலும் கூட வளர்க்கலாம். இது மலைக் காடுகளிலும் நீர் நிலைப் பகுதிகளிலும் 10 அடி உயரத்திற்கு மேல் வளரக்கூடியது. இதை இனப் பெருக்கம் செய்ய 3 கணுவுகளை உடைய முதிர்ந்த குச்சிகளை கரும்பு நடுவது போல் நட்டால் வளர்ந்து விடும். ஆரம்பத்தில் அடிக்கடி தண்ணீர் விட வேண்டும். இதன் இலைகள் மா இலை போன்று இருக்கும். ஆனால் இலைகள் அடுக்காக விசிறி போல் சுற்றிக் கொண்டு மேல் நோக்கி வளரும். சுவை சிறிது புளிப்பு கலந்திருக்கும்.

 மருத்துவப் பயன்கள் -: சர்க்கரை நோயாளிகளுக்கு காஸ்டஸ் பிக்டஸ் என்ற தாவர இலை அதிக பயன்களைத் தருகிறது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் இன்சுலின் மருந்து பயன் படுத்த வேண்டும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. முதல் நிலை சர்க்கரை நோயாளிகளை தவிர்த்து 2 ம் நிலை சர்க்கரை நோயாளிகள் இன்சுலின் ஊசி போட்டுக் கொள்வதைத் தவிர்க்கக் கூடிய சூழிநிலைதற்போது ஏற்பட்டுள்ளது. காஸ்டஸ் பிக்டஸ் என்ற இன்சுலின் தாவரத்தின் இலை ஒன்றை தினந்தோறும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டாலே போதுமானது என்று கூறுகிறார்கள். இந்த தாவரத்தை தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படக் கூடிய மாற்றங்கள் குறித்து முழுமையாக ஆராய்ச்சி செய்து வரும் ஐரோப்பியா மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் இன்சுலின் மருந்து விலங்கிலிருந்தும், சின்தடிக் முறையிலும் தான் தயாரிக்கப் படுகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு இதைவிட மாற்று மருந்து ஏதும் இல்லை. இன்சுலின் மருந்து மாத்திரை வடிவிலோ, திரவ மருந்தாகவோ இன்னும் கண்டு பிடிக்க வில்லை. ஊசிமட்டுமே ஒரே வழியாகும். ஆனால் சர்க்கரை நோய் ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு காஸ்டஸ்பிக்டஸ் அதிக பலன்களைத் தருகிறது என தங்கள் ஆய்வில் குறிப்பிட்டுள்ளனர். ஆய்வுக் கட்டுரை-Pharmacology Study
தாவரத்தின் இலைகளிலிருந்து பெறப் படும் சாறு இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப் படுத்துவதோடு இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற ஆவலையும் படிப்படியாக்க் குறைக்கிறது.ANTI_Diabetic herb.


பல்லாண்டு பயிரான காஸ்டஸ் பிக்டஸ் தாவரத்தின் இலை சாப்பிட்டால் எத்தகைய பின் விளைவிகளும் ஏற்படுவது இல்லை என்று ஆராய்ச்சியில் நிரூபிக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் இன்சுலின் ஊசி போடுவது கட்டாயமில்லை என்ற நிலையில் சர்கரை நோயாளிகள் பயன் அடைவார்கள்.